முன்னாள் அமைச்சரின் செயலாளர் கொலை! வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஆபத்தான நபர் சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு
புதிய இணைப்பு
டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக்கும்பல் உறுப்பினர் ரஞ்சித் குமார என்ற ‘கொண்ட ரஞ்சி’, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
இன்று காலை (09) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் அவர் கைது செய்யப்பட்டார்.

இரண்டாம் இணைப்பு
டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ குற்றப்புலனாய்புத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (09) காலை 8.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற 'கொண்ட ரஞ்சி' டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (09) காலை 8.00 மணிக்கு அவர் டுபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலிக்கு தப்பிச்செல்ல முயற்சி
'கொண்ட ரஞ்சி', இத்தாலிக்கு தப்பிச்செல்ல முயன்றபோது, ஜனவரி 09 திகதி டுபாயில் கைது செய்யப்பட்டார்.

இதன்போது அவரது மனைவியும் குழந்தைகளும் அந்நாட்டின் பாதுகாப்புப்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
கொண்டா ரஞ்சி', முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச்செயலாளர் கொலை வழக்கில் பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.