கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் முள்ளிவாய்க்கால் போராளிகள்: அகழ்வு விவகாரத்தில் புதிய சர்ச்சை (Video)
இலங்கையில் சமகாலத்தில் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதப் புதைகுழிகளை காண வேண்டிய துர்பாக்கிய தேசமாக தமிழர் தாயகம் மாறியுள்ளது.
அந்தவகையில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் 8வது நாள் அகழ்வு முடிவடைந்த நிலையில் 14 மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இறுதிப்போர் என விளிக்கப்படும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் போராடிய நமது சகோதர சகோதரிகளே இவ்வாறு அகழ்வில் மீட்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டுகள் தற்போது இலங்கை அரசுக்கு எதிராக வலுபெற்று வருகின்றன.
மேலும், அகழ்வுப்பணிகளின் தாக்கங்கள் இலங்கை மட்டுமல்லாது ஐ. நாவிலும் எதிரொலித்திருந்தமை இலங்கை அரசுக்கு மற்றுமொரு சவாலாக மாறியுள்ளது.
இவ்வாறு இலங்கையிலும் உலக தரப்பிலும் இடம்பெற்ற முக்கிய விடயங்களை தொகுத்து வருகிறது இன்றைய செய்தி வீச்சு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




