கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு நுழைந்த நபரால் பரபரப்பு (Video)
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் ஆராதனையின் போது தேவாலயத்திற்குள் நுழைய முயன்ற நபர் சந்தேகத்தின் பேரில் கரையோரப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மாத்தளை - அகலவத்தை பிரதேசத்தில் நிரந்தர வதிவிடமாகவும், கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தில் தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட 46 வயதுடைய இம்தியாஸ் என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
தேவாலயத்துக்குள் பாடல்களை கேட்க வேண்டும் என்பதற்காக வந்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சந்தேகத்தின் பேரில் கைது
புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189 ஆவது வருடாந்த பெருவிழா எதிர்வரும்13 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், அதற்கான நாளாந்த ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன.
அதற்கமைய, ஆராதனைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது தேவாலயத்திற்குள் பிரவேசிக்க வந்த போது பிரதான வாயிலில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து இரண்டு தேசிய அடையாள அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
