காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை இரத்து
காங்கேசன்துறை- நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கப்பல் போக்குவரத்து ஆரம்பமாகி 4 நாட்கள் நடைபெற்ற நிலையில் மீண்டும் 3 நாட்களுக்கு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக குறித்த கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பெய்துவரும் கனமழை மற்றும் மோசமான காலநிலையைக் கருத்தில்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கப்பல் சேவை இரத்து
மோசமான காலநிலை காரணமாக கப்பலை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவும், அதனால் இன்று முதல் நாளை மறுதினம் வரை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகின்றது எனவும் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மார்ச் 1ஆம் திகதி முதல் கப்பல் போக்குவரத்து வழமைக்குத் திரும்பும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

£4.75 மில்லியன் மதிப்புள்ள 18 காரட் தங்க கழிப்பறை: துணிகர திருட்டின் சிசிடிவி காட்சிகள்! News Lankasri

தப்பிக்க நினைத்து முத்துவின் கண்ணில் பட்ட ரோஹினி மாமா, இனி நடக்கப்போவது என்ன?- சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
