கீரிமலை நகுலேச்சர ஆலயத்தின் சிவராத்திரி விசேட நிகழ்வு
புதிய இணைப்பு
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான ஈழமணித் திருநாட்டின் வடபால் அமைந்துள்ள கீரிமலை பதியுறை அருள்மிகு நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விசேட பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது நான்கு சாம பூஜைகளும் சிறப்பாக இடம்பெற்றுள்ளதுடன் வசந்த மண்டப பூசைகளுடன் சுவாமி வீதி உலா வருகை தந்ததுடன் பக்தர்களினால் நேர்த்திக்கடன் நிறைவேற்றலும் நடைப்பெற்றுள்ளது.
முதலாம் இணைப்பு
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் கீரிமலை நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் முத்தேர் இரதோற்சவம் பக்திபூர்வமாக இடம்பெற்றுள்ளது.
குறித்த இரதோற்சவ நிகழ்வானது இன்று(08.03.2024) நடைபெற்றுள்ளது.
அலங்கார தீபாராதனை
இதன்போது கருவறையில் வீற்றிருக்கும் விநாயகர், நகுலேஸ்வர் நகுலாம்பிகை, முருகன் வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விஷேட அபிஷேகம் இடம்பெற்றுள்ளது.
பின்னர் வசந்த மண்டபத்தில் அருள்பாலிக்கும் எம்பெருமானுக்கு அலங்கார தீபாராதனை இடம்பெற்று அலங்கரிக்கப்பட்ட மலர்தண்டிகையில் எம்பெருமான் வீற்றிருந்து உள்வீதியூடாக வலம் வந்ததையடுத்து வெளிவீதியூடாக தேரேறி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார்.
இதில் பல பகுதியில் வருகை தந்த பக்தர்கள் கலந்து கொண்டு இஷ்ட சித்திகளை பெற்றுச்சென்றதுடன் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிக் கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
























