அமெரிக்காவினால் இலங்கைக்கு கிடைத்துள்ள அன்பளிப்பு
விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான இரண்டு வண்டிகள் இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவினால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.
குறித்த இரண்டு வண்டிகளும் பாரிய கொள்ளளவு மற்றும் விலை உயர்ந்த வண்டிகளாகும்.
அரசாங்கம் அன்பளிப்பு
அமெரிக்கா -இலங்கை நட்புறவை வலுப்படுத்தும் செயற்பாடுகளின் ஒரு கட்டமாக இந்த வண்டிகளை அமெரிக்கா அரசாங்கம் அன்பளிப்புச்செய்துள்ளது.
இதன் மூலம் இலங்கை விமானப்படையின் ஆற்றல் அதிகரிப்பதுடன் மிகவும் வினைத்திறனுடன் எரிபொருள் நிரப்புதல், விமானப்படையின் நடவடிக்கைகளை மேம்படுத்தல் மற்றும் நீண்ட கால போர் நடவடிக்கைகளுக்கு தயார்படுத்தல் போன்றவற்றில் பயன்மிக்க பங்களிப்பை குறித்த வண்டிகள் ஊடாக இலங்கை விமானப்படை பெற்றுக் கொள்ளவுள்ளது.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் குறித்த வண்டிகளை இலங்கை விமானப்படையினரிடம் கையளித்துள்ளனர்.



