2025இன் விண்கல் மழை: 12ஆம் திகதியன்று உச்சத்தில்
2025ஆம் ஆண்டின் மிகவும் பிரமிக்க வைக்கும் வான நிகழ்வுகளில் ஒன்றான வருடாந்த பெர்சீட் விண்கல் மழை, ஆகஸ்ட் 12 ஆம் திகதி இரவு அதன் உச்சத்தை எட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இருண்ட வானத்தில் சுமார் 100 விண்கற்கள் வரை காணமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை பார்வையிட
வால்மீன் 109P/Swift-Tuttle விட்டுச் சென்ற குப்பைகள் வழியாக பூமி கடந்து செல்லும்போது இந்த நிகழ்வு நிகழ்கிறது.
இந்தநிலையில், வானியலாளர்கள் இந்த நிகழ்வை பார்வையிட அதிகாலை 2:00 மணியை பரிந்துரைக்கின்றனர்.
இதனை அடிவானத்திலிருந்து சுமார் 20 டிகிரி உயரத்தில் பார்க்கமுடியும்.
பெர்சீட் விண்கல் மழை 2025 ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 24 வரை பூமிக்கு தென்படும் என்றும், தடையற்ற காட்சியை பார்க்க விரும்புகிறவர்கள், மின்சார வெளிச்சத்தில் இருந்து விலகி இருண்ட இடத்தில் இருந்து அதனை பார்க்குமாறும் கோரப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி News Lankasri

அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri
