கிண்ணியாவின் 12 கிராம சேவையாளர் பிரிவுகளில் முடக்க நிலை தொடரும்
கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் முடக்கப்பட்டுள்ள 12 கிராம சேவையாளர் பிரிவுகளில் எப்போது முடக்கம் நீக்கப்படும் எனும் கேள்வி கிண்ணியா பிரதேச கோவிட் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த கூட்டம் கிண்ணியா பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
அதன்போது சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளரின் கூற்றுப்படி முடக்கநிலை தொடரும் என தெரியவந்துள்ளது.
கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, மரண வீதம் அதிகரித்து காணப்படுகின்றமையே இம் முடக்கத்திற்காக காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பிரதேசங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருந்தாலும் வர்த்தகம் மற்றும் பொருளாதார மையங்கள் ஒரு சில பிராந்தியங்களிலே இருப்பதனால் மக்கள் கட்டுப்பாடின்றி சுதந்திரமாக நடமாடி நோய்த்தொற்றை அதிகரித்து விடுவார்கள் என்கின்ற அச்சம் காரணமாகவே இந்த முடக்கம் தொடர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam