கிண்ணியா பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
கிண்ணியா பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா தலைமையில் இன்று (16) திருகோணமலையில் நடைபெற்றது.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மது கனியின் ஒருங்கிணைப்பின் கீழ், நடைபெற்ற இந்த கூட்டத்தில், பிரதேசத்தின் பிரதான பிரச்சினைகளாக இருக்கின்ற, கிண்ணியா பிரதேச செயலக எல்லைகளை தெளிவாக நிர்ணயித்தல் தொடர்பாகவும், கிண்ணியா தள வைத்தியசாலைக்கு நிரந்தரமான காணி ஒன்றினை பெற்றுக் கொள்வது சம்பந்தமாகவும், பிரதேச மின் பாவனையாளர் அலுவலகத்திற்கு நிரந்தரமாக காணி ஒன்றினை பெற்றுக் கொள்வது சம்பந்தமாகவும், கலந்தாலோசிக்கப்பட்டு முடிவுகளும் எடுக்கப்பட்டன.
நடவடிக்கை எடுப்பதாக உறுதி
மேலும், திருகோணமலை - மூதூர் பஸ் சேவையினை குட்டிக்கராச்சி ஆலங்கேணி ஊடாக பயணிப்பதற்கான ஏற்பாடுகள், வானாறு திருகோணமலை பேருந்து சேவையினை ஆரம்பித்தல், கச்சக்கொடித் தீவு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்துதல், வானாறு ஆயிலயடிபிரதேசத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றை ஆரம்பித்தல், கல்முனை அக்கரைப்பற்று பேருந்து சேவையினை கிண்ணியா நகரத்திற்குள் பிரவேசித்து வெளிச்செல்ல நடவடிக்கை எடுத்தல் போன்ற முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்படு, கலந்துரையாடப்பட்டதோடு, சம்பந்தப்பட்ட துறைசார் திணைக்கள தலைவர்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.
இக் கூட்டத்தில் செயலாளர் எம்.எச்.எம்.கனி, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், கிண்ணியா நகர சபை தவிதாளர், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலக பதவி நிலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், அரச திணைக்கள தலைவர்கள், பொலிஸார், பொது சுகாதார வைத்திய அதிகாரி, சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 18 மணி நேரம் முன்

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
