கிண்ணியா நகர சபையின் நிதி நெருக்கடி குறித்து வெளியான தகவல்!
கிண்ணியா நகர சபைக்கான புதிய தவிசாளர் தெரிவானது கடந்த 17.06.2025 ந் திகதி நடைபெற்றது.
கழிவகற்றல், மின் குமிழ்களை பழுது பார்த்தல், கான்களை துப்பரவு செய்தல் போன்ற பிரதான பணிகள் கிண்ணியா நகர சபையில் மிகவும் மந்த கதியில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிதி நெருக்கடி
தற்போது சுமார் 38 இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட கடன் சுமையோடு தான் புதிய தவிசாளர் எம.எம்.மஹ்தின் தலைமையிலான புதிய சபை பொறுப்புகளை சுமந்திருப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு நகர சபையின் உறுப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறியுள்ளார்.
இந்நிலையில், கிண்ணியா நகர சபைக்கு இவ்வாறான நிலைமை ஏற்படக் காரணம் என்ன? யாரால்இந்நிலை ஏற்பட்டது? என மக்கள் அறிந்து கொள்ள எதிர்பார்ப்பாத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.





இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri
