பக்கிங்ஹாம் அரண்மனை தொடர்பில் மன்னர் கிங் சார்லஸின் அதிரடி அறிவிப்பு
பிரித்தானியாவின் லண்டன் நகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பக்கிங்ஹாம் அரண்மனையின் 10 ஆண்டுகாலப் புதுப்பித்தல் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், அங்கு குடியேறப் போவதில்லை என மன்னர் கிங் சார்லஸ் III முடிவு செய்துள்ளார்.
இதன் மூலம் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக பிரித்தானிய மன்னர்களின் முதன்மை வசிப்பிடமாகத் திகழ்ந்த இந்த அரண்மனையின் பாரம்பரியம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கிளாரன்ஸ் ஹவுஸ்
கிங் சார்லஸ் தற்போது வசித்து வரும் “கிளாரன்ஸ் ஹவுஸ்” இல்லத்திலேயே தொடர்ந்து தங்குவார் என்றும், பக்கிங்ஹாம் அரண்மனை வழக்கம் போன்று அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் மற்றும் வெளிநாட்டுத் தலைவர்களை வரவேற்கும் அரச தலைமையகமாக மட்டுமே செயல்படும் என்றும் அரச குடும்ப அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
369 மில்லியன் பவுண்டுகள் (சுமார் 487 மில்லியன் டொலர்கள்) செலவில் இந்த அரண்மனையின் மின்சார இணைப்புகள் மற்றும் குழாய்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, பிரித்தானிய வரலாற்றிலேயே முதல்முறையாக மன்னர் கிங் சார்லஸின் வரி விபரங்கள் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த 2024 - 2025 நிதியாண்டில் அவர் 12.9 மில்லியன் பவுண்டுகள் (சுமார் 17 மில்லியன் டொலர்கள்) வருமான வரி செலுத்தியுள்ளார்.
இதன் மூலம் பிரித்தானியாவில் அதிக வரி செலுத்தும் முதல் 100 நபர்களின் பட்டியலில் அவர் இடம் பிடித்துள்ளார்.
சட்டப்படி, பிரித்தானிய மன்னர் வரி செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என்றாலும், அவர் தானாக முன்வந்து இந்த வரியைச் செலுத்தியுள்ளார்.
கடந்த 2022 இல் ராணி எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு, அரச குடும்பத்தின் நிதி நிலவரங்கள் குறித்து எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில் இந்த விபரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
வடகொரியாவின் அதிநவீன ஆயுதச் சோதனை - பதிலடி கொடுக்க 5 இலட்சம் ட்ரோன் போர்வீரர்களை உருவாக்கும் தென்கொரியா