ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய சப்பரம் ரதோற்சவம் கொண்டாட்டம்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான மகோற்சவ விஞ்ஞாபனம் (14.06.2026)அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில், நாளைய தினம் (27.06.2026) சப்பரம் ரதோற்சவம் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
இதற்கமைய, தான்தோன்றீஸ்வரர் ஆலய பக்த அடியவர்கள் அனைவரும் பெருமான் சப்பரம் ரதோற்சவத்திற்கு வீதி உலா வருவதனை கண்டு களிப்பதோடு பெருமானை தரிசிக்க முடியும் என திருவிழா உபயகாரர்கள் வேண்டி நிற்கின்றனர்.
சப்பரம் ரதோற்சவம்
இதனை தொடர்ந்து (28) ஆம் திகதி ஞாயிற்றுகிழமை தேர்த்திருவிழாவும் சிறப்புற இடம்பெறவுள்ளது.
ஆலய நிர்வாகத்தின் தீரமானத்தின்படி, இந்த வருடம் முதல் இனிவரும் காலங்களில் காலை 8 மணிக்கு தேர்த்திருவிழாவும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
