கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்! சந்தேகநபர்களின் மரணம் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு
கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களின் மரணம் தொடர்பாக பதில் பொலிஸ் மா அதிபரிடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கெரகல பொலிஸ் நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்படும் அனைத்து சந்தேக நபர்களின் உயிரையும், பொலிஸ் அதிகாரிகளின் உயிரையும் பாதுகாக்கும் பொறுப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சர்
மேலும் கருத்து தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,
"இப்போது பலர் தேசிய பாதுகாப்பு பற்றி தேவைக்கு அதிகமாக பேசத் தொடங்கியுள்ளனர்.
இந்த நாட்டில் பாதாள உலகத்தை உருவாக்க, உணவளிக்க மற்றும் பராமரிக்க போதுமான அரசியல்வாதிகள் தலையிட்டுள்ளனர்.
இது குறித்து போதுமான ஆதாரங்கள் உள்ளன.
கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சிகள் தேசிய பாதுகாப்புக்காக அதிக சத்தம் போட்டு வருகின்றன. தேசிய பாதுகாப்பு நிலைநாட்டப்பட்டுள்ளது. அதில் எந்த பிரச்சனையும் இல்லை" என்றார்.

எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து? 2.5 லட்சம் கனேடியர்கள் மனுவில் கையெழுத்து News Lankasri

தப்பிக்க நினைத்து முத்துவின் கண்ணில் பட்ட ரோஹினி மாமா, இனி நடக்கப்போவது என்ன?- சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
