அதிகரித்துள்ள தீங்கு விளைவிக்கும் பேச்சுக்கள்: ஐ.நா வெளியிட்டுள்ள தகவல்
2024, நவம்பர் 14 ஆம் திகதி நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைந்து, 2024 நவம்பரில் தீங்கு விளைவிக்கும் பேச்சுக்கள் 113சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் தீங்கு விளைவிக்கும் பேச்சு குறித்த அதன் சமீபத்திய அறிக்கையை வெளியிட்டுள்ள, இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம். 2024 செப்டம்பரில் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன மற்றும் அல்லது மத சிறுபான்மையினரை குறிவைத்து வெறுப்புப் பேச்சுக்கள் 8 மடங்கால் அதிகரித்துள்ளதாக அதில் கூறியுள்ளது.
2024 ஆம் ஆண்டில் பாலின அடிப்படையிலான தீங்கு விளைவிக்கும் பேச்சில் 159 வீத அதிகரிப்பும்,பெண்களை குறிவைத்து 45 வீத தீங்கு விளைவிக்கும் பேச்சுக்களும் பதிவாகியுள்ளன.
வெறுப்புப் பேச்சு
இருப்பினும், 2024 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் ஒட்டுமொத்தமாக தீங்கு விளைவிக்கும் பேச்சில் சரிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
செப்டெம்பர் 21 அன்று ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன மற்றும் அல்லது மத சிறுபான்மையினரை குறிவைத்து வெறுப்புப் பேச்சு 8 மடங்கு அதிகரித்தன.
தேர்தலுக்குப் பின்னர் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள சிறுபான்மை சமூகங்கள் மற்றும் பெருந்தோட்டத் துறையை அவமதிக்கும் குறிப்புகள் இருந்தன அவை அவர்களின் வாக்களிப்பு விருப்பங்களுக்கு பதிலளிக்கும் விதமாக அமைந்திருந்தன.
சமூக, ஊடக வெறுப்பு
சிறுபான்மையினர் பிரச்சினைகள் குறித்த ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளரின் கூற்றுப்படி, உலகளவில் சமூக ஊடக வெறுப்பு பாதிக்கப்பட்டவர்களில் 70 வீத பேர் சிறுபான்மையினராவர்.
ஐக்கிய நாடுகளின் தரவுகளின்படி, இலங்கையில் கடந்த ஆண்டு இணையத்தில், 51 வீத தீங்கு விளைவிக்கும் பேச்சு பெண்களையும் 24 வீத சிறுபான்மையினரையும் குறிவைத்தது.
அத்துடன், கிறிஸ்தவ எதிர்ப்பு, முஸ்லிம் எதிர்ப்பு மற்றும் இந்து எதிர்ப்பு உணர்வுகள் பெண்களை, குறிப்பாக பொது விழாக்களில் ஈடுபடுபவர்களை அல்லது பொதுவில் பேசுபவர்களை குறிவைக்கும் தீங்கு விளைவிக்கும் பேச்சுகளும் தொடர்கின்றன என்றும்,இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |