வெடுக்குநாறி மலையில் 5 மணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட சிவராத்திரி
வெடுக்குநாறி மலையில் 5 மணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட சிவராத்திரி. இதனை சிவன்பகல் என்றே கூற வேண்டும். இங்கே அடக்கு முறைகள் பிரயோகிக்கப்படுகின்றது என சமூக செயற்பாட்டாளர் எஸ்.தவபாலன் தெரிவித்துள்ளார்.
தமிழர்களுடைய வரலாற்று இடமாகவும், வழிபாட்டு இடமாகவும் இருக்கின்ற வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடுகள் இடம்பெற்றிருந்தது.
வழிபாட்டின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிவனை நினைத்து விரதம்
மேலும், “இந்துக்களுடைய முக்கிய விரதமாக திகழ்வது சிவராத்திரி சிவனுக்கு இரவு பொழுதிலே சிவனை நினைத்து விரதம் இருப்பது வழமை.
ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் வரலாற்று தொன்மைமிகு ஆலயம். இந்த ஆலயத்தின் வழிபாட்டு உரிமைக்காக போராடிவரும் இந்நிலையில் தொடர்ச்சியாக நெருக்கடிகளுக்கு அப்பால் போராடி வருகின்றோம்.
கடந்த வருடம் இவ்விடத்தில் சிவராத்திரி வழிபாடு இடம்பெறும் போது பொலிஸார் மிகவும் மோசமான முறையில் வழிபாடுகளை நடாத்த விடாமல், திட்டமிட்டு பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி 13 நாட்கள் 8 நபர்களை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள்.
இம்முறை துரதிர்ஷ்டவசமாக 5 மணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட சிவராத்திரியாக இதனை ஒரு சிவன்பகல் என்றே கூற வேண்டும்.
இவ்விடத்தில் அடக்கு முறைகள் பிரயோகிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. என்ன தான் நெருக்கடிகள் இருந்தாலும் எங்களுடைய தொன்மைகளையும், வழிபாட்டு உரிமைகளையும் யாரும் தீர்மானிக்க முடியாது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |