"கிளிநொச்சி - முல்லைத்தீவு எல்லை நிர்ணயம் தொடர்பில் மக்களிடையே குழப்பம்" (Photos)
கிளிநொச்சி அம்பாள்நகர் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள சாந்தபுரம் கிராமம் எல்லை நிர்ணயத்தின் போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உள்வாங்கப்படும் என்ற தகவல்களால் சாந்தபுரம் மக்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆராயும் கூட்டம் ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இன்று நடைபெற்றது.

சுமார் 32 வருடங்களாக கிளிநொச்சி நிர்வாக சேவை பரப்பிற்கு உட்பட்டு நிர்வாகம், கல்வி, சுகாதாரம் , போக்குவரத்து சமூக சேவைகள் அனைத்தும் கிளிநொச்சி நிர்வாகங்களினாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தது.
எனினும் புதிய எல்லை மறுசீரமைப்பின் போது குறித்த கிராமம் முல்லைத்தீவு எல்லைக்குள் கொண்டு செல்லப்படும் என்று சில அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் மக்கள் மிகுந்த பதற்றம் அடைந்து காணப்பட்டனர்.
குறித்த குழப்பங்களை இனங்கண்டு தீர்வு காண வழிகாட்டும் முகமாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களை மக்கள் அழைத்து இன்று கலந்துரையாடியுள்ளனர்.

இதன் போது குறித்த அனைத்து விடயங்களையும் தெளிவுபடுத்தி எல்லை மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு அரச அதிபர் ஊடாக அனுப்பி வைப்பதற்கும் நாடாளுமன்றத்திற்கு இவ்விடயத்தை கொண்டு செல்வதற்கும் ஆராயப்பட்டது.

இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் ஜீவராசா கட்சியின் அமைப்பாளர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அத்துடன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டம் இன்று கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் சந்தையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சிவஞானம் சிறிதரன், தமிழ் மக்களைச் சாகடிக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இன்னும் நீக்கப்படாமல் இருப்பது நாட்டுக்கு மிகப்பெரிய அவமானமாகும்.
இந்தப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிடிக்குள் அகப்பட்டு பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகள் கொல்லப்பட்டுள்ளனர் . எனவே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துக் செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டம்
பல பகுதிகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின்
ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் ஸ்கந்தபுரம்
பொதுச் சந்தையில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 2 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam