கிளிநொச்சி போராட்டத்தில் பொலிஸார் நடத்திய தாக்குதல்: வலுப்பெறும் தனித் தமிழீழ கோரிக்கை
இலங்கையில் தமிழீழச்சொந்தங்கள் மீது தொடரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்திட இந்தியா உள்ளிட்ட ஐநா பேரவை முன் வரவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் வன்னி அரசு கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் தனித் தமிழீழம் அமைவது ஒன்றே சரியான தீர்வாகும். ஒரு பொது வாக்கெடுப்பை ஐநா பேரவை நடத்துவதுன் மூலம் தமிழீழம் எனும் தேசத்தை படைக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தனித் தமிழீழம் அமைவது ஒன்றே சரியான தீர்வு
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஸ்டித்து இன்று கிளிநொச்சியில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் தடியடி தாக்குதலை நடத்தியிருந்தனர்.
இந்தநிலையில், குறித்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் விடுத்துள்ள செய்தியில்,
இலங்கை சுதந்திர நாள் எமக்கல்ல; அது கருப்பு நாள் (கரி நாள்) என கிளிநொச்சி வீதிகளில் யாழ் மாணவர்கள் பொது மக்களுடன் கோரிக்கை பேரணியை இன்று முன்னெடுத்தனர்.
#இலங்கை சுதந்திர நாள் எமக்கல்ல;
— வன்னி அரசு (@VanniKural) February 4, 2024
அது கருப்பு நாள் (கரி நாள்)”
என கிளிநொச்சி வீதிகளில்
யாழ் மாணவர்கள்
பொது மக்களுடன் கோரிக்கை பேரணியை இன்று முன்னெடுத்தனர்.
அப்போது இடை மறித்த சிங்கள காவல்துறை தடியடி நடத்தி,கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இத்தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.… pic.twitter.com/hOnfLKz9ec
அப்போது இடை மறித்த சிங்கள பொலிஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இத்தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
சுதந்திர நாளை சிங்கள பேரினவாதிகள் கொண்டாடி கொண்டிருக்கும் போது, தமிழீழ மக்கள் இன்னும் அடிமைகளாக, சொல்ல முடியாத துயரத்தில், தங்களது நிலத்தையும் உரிமைகளையும் இழந்து நிற்கின்றனர்.
இச்சூழலில், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர நாளை தமிழீழ மக்கள் புறக்கணிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று காலை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த ஜனநாயக ரீதியான போராட்டத்தை சிங்கள பேரினவாதம் அடக்கி ஒடுக்கும் வகையில் செயல்படுவதை விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
இரு தேசமாக இரு தேசிய இனங்களாக இருக்கும் இலங்கையில் தனித் தமிழீழம் அமைவது ஒன்றே சரியான தீர்வாகும்.
ஒரு பொது வாக்கெடுப்பை ஐநா பேரவை நடத்துவதுன் மூலம் தமிழீழம் எனும் தேசத்தை படைக்க முடியும் என விடுதலைச்சிறுத்தைகள் நம்புகிறோம். இதற்கு இந்தியாவும் உதவிட வேண்டும்.
ஆகவே, இலங்கையில் தமிழீழச்சொந்தங்கள் மீது தொடரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்திட இந்தியா உள்ளிட்ட ஐநா பேரவை முன் வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |