வெள்ளத்தினால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மக்கள்
இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
ஜயன் கோயிலடி, ஊரியான் பெரியகுளம், கண்டாவளை ஆகிய பகுதிகளில் அறுவடை நடைபெற்று எஞ்சி இருந்த நெற்கதிர்கள் வெள்ளத்தாள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், வெள்ள பாதிப்பு காரணமாக குளங்களில் நீர்மட்டம் அதிகரித்து, அங்குள்ள முதலைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிமையில் செல்ல முடியாத நிலை
இதன் காரணமாக வீ வெளியில் செல்வோர் தனிமையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுகிறது.
மேலும் வட்டக்கச்சி பெரியகுளம் பகுதியில் இருந்து புளியம்பொக்கனை செல்லும் பிரதான வீதியில் வெள்ளம் குறுக்கரத்து பாய்வதன் காரணமாக கனரக வாகனங்கள் மாத்திரமே இவ்வீதி ஊடாக பயணிக்க கூடியதாக உள்ளதாகவும் இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் தமது கற்றல் செயற்பாட்டை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
