கூறிய ஆயுத முனையில் கொள்ளை: கிளிநொச்சியில் சம்பவம்(Photos)
கிளிநொச்சி - பெரியகுளம் பகுதியில் வீட்டு உரிமையாளர் ஒருவரின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கொள்ளை சம்பவமானது நேற்றிரவு (12.12.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
பெரியகுளம் பகுதியிலுள்ள வீடொன்றில் உரிமையாளர் வெளியில் வந்த தருனத்தில் அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டில் இருந்த முதியவர் இருவரையும் கைற்றால் கட்டி தனி அரையில் அடைத்து உள்ளனர்.
இதையடுத்து வீட்டில் இருந்த அனைத்து உடைமைகளையும் சோதனையிட்டு அங்கிருந்த இரண்டு பவுன் தங்க நகைகள் மற்றும் 45 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையிடு சென்றுள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தை அடுத்து இரண்டு துவிச்சக்கர வண்டிகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri