கிளிநொச்சியில் காணாமல் போனவர் மல்லாவியில் அடித்து கொலை!
முல்லைத்தீவு - மல்லாவி பாலிநகர் மூன்றுவாய்க்கால் வயல் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட நபர் ஒருவரின் சடலம் தொடர்பிலான பிரேத பரிசோதனையில் அவர் தாக்குதலுக்கு உள்ளன சம்பவம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு ,மல்லாவி பாலிநகர் மூன்று வாய்க்கால் வயற்பகுதியிலிருந்து கடந்த 17.06.2023 அன்று சடலம் ஒன்று மீட்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீட்கப்பட்ட சடலம் இல 53, கட்சன் வீதி , வட்டகச்சியை சேர்ந்த இளையதம்பி ராஜ்மோகன் (49) என்பவர் என அடையாளம் காணப்பட்டது.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணை
சடலமாக மீட்கப்பட்ட நபர், துணுக்காய் விநாயகபுரம் பகுதியில் வசித்து வந்த நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தபோதே இவர் காணாமல் போயிருந்ததாகவும், இவர் ஏற்கனவே கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் இவர் தனது உறவினரால் தாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இவரின் உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கா கொண்டுவரப்பட்டு மாவட்ட மருத்துவமனை சட்டவைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரோத பரிசோதனையின் போது தலையில் அடிகாயங்கள் காணப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இவரின் சடலம் நேற்று(18.06.2023) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |