இரணைமடு குளத்தின் நீர்மட்டம் உயர்வு : மக்களுக்கு விடுப்பட்ட எச்சரிக்கை (Photos)
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்த்தேக்கமான இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 35 அடி 5 அங்குலம் ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ச்சியாக மழை பெய்யுமாக இருந்தால் இரணைமடு
குளத்தின் நீர்வரத்தை கருத்திற்கொண்டு, குளத்தின் வான்கதவுகள் திறப்பதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, இரணைமடு குளத்தின் கீழ் பகுதியில் வாழும் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.
கனகாம்பிகைக்குளம் மீண்டும் வான்பாய ஆரம்பித்துள்ளது. இதேவேளை பாரதிபுரம், பொன்னகர், திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழை காரணமாக வெள்ள நீர் மக்கள் குடியிருப்புக்களிற்குள் புகுந்துள்ளது.
உள்ளுர் வீதிகளில் போக்குவரத்து செய்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். எனினும் தொடர் மழை இல்லாமையால் வெள்ள நீர் வெகுவாக வடிந்தோடி வருகின்றது.
இடர் தொடர்பான புள்ளி விபரங்கள் மற்றும் பாதிப்புக்கள் தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தரவுகளை திரட்டி வருகின்றனர்.










நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam
