கிளிநொச்சிக்கு விஜயம் செய்த இந்திய துணைத்தூதுவர்! வழங்கப்பட்டுள்ள உலருணவு பொருட்கள்
கிளிநொச்சியில் பேரிடர் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்களின் அன்பளிப்பாக வழங்கப்பட்ட உலருணவு பொருட்கள் இன்று(20-12-2025) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கும் வகையில் இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்களால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று (20-12-2025) சனிக்கிழமை மதியம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
உலருணவு பொருட்கள்
இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்த இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி ஏ-35 வீதியில் புயல் வெள்ளம் காரணமாக சேதமடைந்து இந்திய இராணுவத்தினரால் தீர்மானிக்கப்பட்ட பாலத்தின் கட்டமான பணிகளை பார்வையிட்டதன் பின்னர் உலருணவு பொருட்களை வழங்கி வைத்துள்ளார்.



