கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட அபிவிருத்தி கூட்டம்
கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றுள்ளது.
குறித்த விசேட அபிவிருத்தி கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (14) நடைபெற்றுள்ளது.
இதில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அடிப்படைத் தேவைகள்
கிளிநொச்சி மாவட்டத்தில் பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடி தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் குறித்த விசேட அபிவிருத்தி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காணி, மீள்குடியேற்றம், வாழ்வாதார உதவித் திட்டங்கள், அபிவிருத்தி செயற்திட்டங்கள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் இணைப்பாளர், சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்கள், விடய உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 14 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam