கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்குத் தவிசாளர், உப தவிசாளர் நியமனம்!
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று உள்ளூராட்சி சபைகளிலும் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்கவுள்ள நிலையில், அந்த மூன்று சபைகளுக்குமான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையில் நடைபெற்றுள்ளது.
மூன்று உள்ளூராட்சி சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கும், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை நிர்வாக உறுப்பினர்களுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தெரிவுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
அதற்கமைய கரைச்சி பிரதேச சபையின் தவிசாளராக அருணாசலம் வேழமாலிகிதனும், உப தவிசாளராக புஸ்பநாதன் சிவகுமாரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நியமிக்கப்பட்டவர்கள்
பூநகரி பிரதேச சபையின் தவிசாளராக சிவகுமாரன் ஸ்ரீரஞ்சனும், உப தவிசாளராக குணலக்சுமி குலவீரசிங்கமும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளராக சுப்பிரமணியம் சுரேனும், உப தவிசாளராக சிவகுரு செல்வராசாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் தெரிவுகள் தொடர்பான மாவட்டக் கிளையின் எழுத்து மூல தீர்மானம், கிளிநொச்சி மாவட்டக் கிளைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனால் கட்சியின் பதில் தலைவரிடம் நேரடியாகக் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri