கிளிநொச்சி மாவட்டம் தற்போது வரை பாதுகாப்பாகவே உள்ளது - ரூபவதி கேதீஸ்வரன்
கிளிநொச்சி மாவட்டம் தற்போது வரை கோவிட் பாதிப்பிலிருந்து பாதுகாப்பான மாவட்டமாகவே இருக்கிறது. எனவே இந்த நிலைமையினை தொடர்ந்தும் பேணுவதற்கு பொதுமக்கள் சுகாதார பிரிவினரின் ஆலோசனைகளைப் பற்றி நடந்துகொள்ள வேண்டும் எனக் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செயலகத்தில் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் எழுந்தமானதாக மேற்கொள்ளப்படுகின்ற பி.சி.ஆர் பரிசோதனைகளில் கிடைக்கப்பெறுகின்ற முடிவுகளின் படி மாவட்டத்தைச் சேர்ந்த எவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாக இல்லை.
வெளிவட்டங்களிலிருந்து வருகின்றவர்களே தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்டம் ஓரளவுக்குப் பாதுகாப்பாகவே உள்ளது.
இருப்பினும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பொது
மக்கள் நடந்துகொள்வதோடு, சுகாதாரத் துறையின் ஆலோசனைகளின் படியும்
செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.