கிளிநொச்சி விவசாய ஆராய்ச்சி நிலைய ஒப்பந்தத் தொழிலாளிகள் சிறீதரன் எம். பியிடம் கோரிக்கை
கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளிகளாகக் கடமையாற்றும் 23 ஊழியர்கள், தமக்கான நிரந்தர நியமனத்தைப் பெற்றுத்தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் அலுவலகத்திற்கு, நேரில் சென்ற நிலையிலேயே குறித்த ஊழியர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
நிரந்தர நியமனம்
இதன்போது, உள்ளூராட்சி மன்றங்களில் ஒப்பந்தப் பணியார்களாகக் கடமையாற்றியோரின் நிரந்தர நியமனம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தாம் அறிந்துகொண்டதாகவும், அதேபோன்று தமது நியமனம் தொடர்பிலும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக்கோரியுள்ளனர்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு எழுத்துமூல விண்ணப்பம் ஒன்றையும் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
