மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளவரசி ஆன்
பிரித்தானிய மன்னரின் தங்கையான இளவரசி ஆன்(Princess Anne) தனது குதிரைகளில் ஒன்றால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் அவர் நேற்று(28.06.2024) மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு Gatcombe Park இல் அமைந்துள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏராளமான பொறுப்புகள்
பிரித்தானிய மன்னர் சார்லசின் தங்கையான இளவரசி ஆன், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது குதிரைகளில் ஒன்றால் தாக்கப்பட்டுள்ளார்.
இதன்போது அவருக்கு தலையில் அதிகபடியான தாக்கம் ஏற்பட்டதால் concussion என்னும் பிரச்சினை ஏற்பட்டு ஞாபக மறதியாலும் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
மேலும், மருத்துவர்களின் ஆலோசனையின்படி, அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
மன்னர் சார்லசும் இளவரசி கேட்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 73 வயதிலும், ஏராளமான பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு பரபரப்பாக இயங்கிவந்தார் இளவரசி ஆன் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 44 நிமிடங்கள் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
