வடக்கில் இருவேறு விபத்துக்களில் இருவர் பலி
கிளிநொச்சி ஏ-09 வீதியில் கந்தசாமி கோவிலடியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 5. 45 மணியளவில் யாழ்.பருத்தித்துறையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
மோட்டார் சைக்கிள் பயணித்த கிளிநொச்சி - கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய குமரேஸ்வரன் என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தூரிலிருந்து சுண்ணாகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் வாகனம் பலாலிலிருந்து ஏழாலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் ஏழாலை வடக்கு சேர்ந்த சங்கரப்பிள்ளை ஜெய்சங்கர் என்பவர் உயிரிழந்துள்ளார். விபத்திற்கு காரணமான சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன், இது தொடர்பில் சுண்ணாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.