உக்ரைனில் சித்ரவதை முகாம்கள்! அம்பலமானது ரஷ்யாவின் கொடூர செயல்கள்-செய்திகளின் தொகுப்பு
உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போரானது, ஓராண்டை கடந்து நீண்டு கொண்டே செல்கிறது. இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரியில் போரின் தொடக்கத்தின்போது கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றியது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் தொடக்கம் வரையிலான 8 மாதங்களாக அந்நகரை தனது கட்டுப்பாட்டில் ரஷ்யா வைத்திருந்து உள்ளது. அப்போது, கெர்சன் நகரில் சித்ரவதை முகாம்களை ரஷ்யா அமைத்து உள்ளது என கூறப்படுகிறது.
உக்ரைன் மற்றும் உக்ரைனுடன் தொடர்பில் உள்ளவர்கள் அந்த முகாம்களில் கைதிகளாக அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கெர்சன் நகர் ரஷியா கட்டுப்பாட்டுக்குள் வந்தபின்னர், தெருக்களில் நடந்து சென்ற பலர் ரஷ்ய வீரர்களால் பிடிபட்டு உள்ளனர்.
அவர்களது தொலைப்பேசியில் உக்ரைனை சேர்ந்தவர்கள் என்பதற்கு ஆதரவான தடயங்கள் காணப்பட்டதும் கைது செய்யப்பட்டு உள்ளனர் என கைதிகளாக அடைப்பட்ட பலர் கூறுகின்றனர். கெர்சனில் 20 சித்ரவதை அறைகள் காணப்பட்டு உள்ளன.