கனடாவிலுள்ள இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்
கனடாவிலுள்ள(Canada) சர்ரே என்ற பகுதியில் லட்சுமி நாராயண் கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவில் சமீபகாலமாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய பிரதமர் மோடி
சில நாட்களுக்கு முன்பு பிரித்தானியா கொலம்பியா மாகாணம் வான்கூவரில் உள்ள ஒரு குருத்வாரா மீது அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.
குருத்வாரா சுவர்களில் இந்திய பிரதமர் மோடியை அச்சுறுத்தும் வகையில் வாசகங்கள் இடம்பெற்று இருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக வான்கூவர் பொலிஸார் தெரிவித்து உள்ளனர்.
இந்து கோவில் மீது நடந்த தாக்குதல்
இந்த நிலையில், கனடாவில் இந்து கோவில் மீது நடந்த தாக்குதல் நடத்தியுள்ளனர். கோவிலும் சேதப்படுத்தப்பட்டு உள்ளது. கோவில் சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் இடம் பெற்று இருந்தது.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு அங்குள்ள இந்திய சமூகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
கனடா பொலிஸார்
இந்திய வம்சாவளியை சேர்ந்த கனடா நாட்டு எம்.பி. சந்திரஆர்ய எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட கண்டன பதிவில்,
The attacks on Hindu temples that began several years ago continue unabated today — this latest graffiti on the Hindu temple is yet another chilling reminder of the growing influence of Khalistani extremism.
— Chandra Arya (@AryaCanada) April 20, 2025
Well-organized, well-funded, and backed by significant political clout,… https://t.co/0WfQdGgoNm
பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்து கோவில் மீதான தாக்குதல் இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த செயலை கடுமையாக கண்டிக்கிறேன். இது காலிஸ்தான் தீவிரவாதம் வளர்ந்து வருவதை காட்டும் வகையில் உள்ளது என்று அவர் தெரிவித்து உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கனடா பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 23 மணி நேரம் முன்

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
