கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக தப்பிச்சென்ற முக்கிய சாட்சி
ட்ரிபோலி ப்ளட்டோன் என்ற பெயரில் இலங்கை இராணுவம் நடத்தி வந்த கொலைக்குழு தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் அக்குழுவில் இருந்து விலக நினைத்தால் அவர்கள் படுகொலை செய்யப்படுவார்கள்.
அவ்வாறு குறித்த குழுவினால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இளைஞன் தான் அக்குழுவின் முக்கிய உறுப்பினராக இருந்த ஹனீபா முகம்மட் ஹம்ஜத்.
கல்முனை - மருதமுனையை சேர்ந்த இவர், 2000ஆம் ஆண்டின் நடுப்பகுதிகளில் கருணா குழுவின் பேச்சாளராகவும் பிள்ளையானின் பிரத்தியேக தொடர்பாளராகவும் கடமையாற்றி கொண்டிருந்த அசாத் மௌலானாவின் நெருங்கிய உறவினர்.
அசாத் மௌலானாவின் பிரத்தியேக மெய்பாதுகாவலராக அந்த காலகட்டத்தில் ஹம்ஜத் கடமையாற்றி வந்துள்ளார்.
ஹம்ஜத் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் முக்கிய சாட்சி நாட்டை விட்டு தப்பியோடியமை உள்ளிட்ட பல தகவல்களை ஆராய்கின்றது ஐபிசியின் உண்மைகள் நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |