ஐந்து மணிநேரத்திற்குள் தீர்ந்த மண்ணெண்ணெய்: ஏமாற்றத்தில் மக்கள்(Photo)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள பலநோக்கு கூட்டுறவு
சங்கத்திற்கு ஒரு மாதத்தின் பின்னர் நேற்று(1) இரவு 6600 லீற்றர்
மண்ணெண்ணெய் கிடைத்துள்ளது.
இதனைதொடர்ந்து, இரவு 11.00 மணியளவில் மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதில் முரண்பாடு
மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் முண்டியடித்த நிலையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த முரண்பாட்டை ஏற்படுத்திய நபர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன் காரணமா புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஜி.ஆர். கேரத் தலைமையிலான குழுவினர் மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது முதற்கட்டமாக கடற்தொழிலாளர்களுக்கு 20 லீற்றர் மண்ணெண்ணெய் முதன்மைப்படுத்தி வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து விவசாயிகளுக்கும் மக்களுக்கும் பங்கிட்டு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
4ஆயிரம் லீற்றர் மண்ணெண்ணெய் கடற்தொழிலாளர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ள நிலையில் மீதி எண்ணையினை மக்களுக்கு வழங்கும் நடவடிக்கையில் முதற்கட்டமாக 500 ரூபாவிற்கும் வழங்கியபோதும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த காரணத்தினால் பின்னர் 300 ரூபாவிற்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஏமாற்றமடைந்த மக்கள்

இருப்பினும், இன்று (2) அதிகாலை 4.00 மணிவரை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள மண்ணெண்ணையினை பெற்றுக்கொள்ள மக்கள் வரிசையில் நின்றபோதும் இறுதியில் குறிப்பிட்ட ஒரு தொகுதி மக்களுக்கு மண்ணெண்ணெய் கிடைக்காத நிலையினால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளார்கள்.
தற்போது மக்கள் மத்தியில் மண்ணெண்ணைக்கான தேவை அதிகமாக காணப்படுகின்றது.
அதனை ஈடு செய்யமுடியாத நிலையில் மண்ணெண்ணெய் விநியோகம் காணப்படுகின்றமை
குறிப்பிடத்தக்கது.