பிரித்தானியாவில் துப்பாக்கிச்சூடுக்கு இலக்கான 9 வயது சிறுமி
பிரித்தானியாவில்(UK) லண்டனிலுள்ள(London) உணவகம் ஒன்றினுள் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிக்கிய சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் லண்டனில், Hackney என்னுமிடத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் கடந்த புதன்கிழமை இரவு 9.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச்சூடு சம்பவம்
குறித்த உணவகத்தில் தந்தையான அஜீஷ் மற்றும் தாய் வினயாவுடன் உணவருந்தி கொண்டிருந்திருந்த கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த 9 வயதுடைய லிஸ்ஸல் மரியா என்னும் சிறுமியே இதன்போது பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.
சம்பவத்தினத்தன்று, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், உணவகத்தின் வெளியே அமர்ந்திருந்த மூன்று பேரை நோக்கி மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் உணவகத்துக்குள் உணவருந்திக்கொண்டிருந்த மரியா மீது ஒரு குண்டு பாய்ந்துள்ளது.
இந்நிலையில், துப்பாக்கியால் சுடப்பட்ட 26, 37 மற்றும் 42 வயதுள்ள மூன்று ஆண்களும், சிறுமி மரியாவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சிறுமியின் நிலைமை தற்போது மிக கவலைக்கிடமாக இருப்பதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
