பிரித்தானிய அரசியலில் வரலாற்றுத் தடம் பதிக்கும் ஈழத் தமிழ் பெண்மணிகள்
பிரித்தானியாவில் ஈழத் தமிழர்களின் அரசியல் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், ஈழத் தமிழ் பெண்னொருவர் லேபர் கட்சியின் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உமா குமரன்(Uma Kumaran) என்னும் பெண்மணியே இவ்வாறு வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள தொகுதியானது லேபர் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு அதிக வெற்றிவாய்ப்புக்களை கொடுக்கும் தொகுதியாக பார்க்கப்படுகின்றது.
வெற்றிவாய்ப்பு அதிகம்
இதன் காரணமாக உமா குமரனுக்கு அதிக வெற்றி வாய்ப்புக்கள் இருப்பதாகவும், எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வெற்றிப்பெற்று நாடாளுமன்றம் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள உமா குமரனுக்கு, கடந்த மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் போது பாப்பரசர் பிரான்ஸிஸை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
So proud to be your first ever Labour candidate for Stratford and Bow!
— Uma Kumaran (@Uma_Kumaran) May 30, 2024
After 14 years of Tory decline, we have a chance to make a real difference with a Labour Government.
Looking forward to meeting so many of you on the doorstep 🌹 https://t.co/EAG9OSZrck
மேலும், தங்கம் டெபோனையர் என்றும் தமிழ் பெண்ணொருவரும் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக இதற்கு முன்னரும் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இம்முறை இவர் வெற்றியீட்டுவாராயின் கெபினட் அந்தஸ்த்துள்ள மந்திரியாக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இவரும் ஈழத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்டவர் என்பதுடன் லேபர் கட்சியின் முக்கியஸ்தராகவும் திகழ்கின்றார். அத்துடன், இவர் கெபினட் அந்தஸ்த்துள்ள மந்திரியாக வருவது ஈழத் தமிழர்களின் அரசியல் நகர்வுக்கு மிகப் பெரிய பலமாகவும், வலுச் சேர்க்கும் ஒன்றாகவும் இருக்கும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
On Mullivaikkal Remembrance Day, we commemorate the tens of thousands of Tamil people who were killed in the final stages of the Sri Lankan War. pic.twitter.com/jqC51WDM5Q
— Thangam Debbonaire (@ThangamDebb) May 17, 2024
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |