பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது
மன்னார்-சிலாவத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாசீம் சிற்றி பகுதியில் ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடற்படை புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் நேற்றையதினம்(2) மாலை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இரகசிய தகவல்
மீட்கப்பட்ட கேரள கஞ்சா 31 கிலோ 62 கிராம் எடை கொண்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சவரிபுரம், சிலாவத்துறை பகுதியை சேர்ந்த 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் வழக்கு பொருட்கள் மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
