சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் கேரள கஞ்சா மீட்பு: இருவர் கைது
கிளிநொச்சி - பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்குப்பிட்டி பாலத்துக்கு அண்மித்த கௌதாரிமுனை பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 40 கிலோ மற்றும் 400 கிராம் உள்ளடங்கிய கேரள கஞ்சாவும் அதனை சூட்சுமமாக கடத்திச்செல்ல முற்பட்ட கூலர் வாகனமும் மீட்கப்பட்டுள்ளது.
இராணுவப்புலனாய்வாளர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் மூலம் கூலர் ரக வாகனம் ஒன்றில் சூட்சுமமான முறையில் கொண்டு செல்லப்பட்ட 40 கிலோ 400 கிராம் எடை கொண்ட 22 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இருவர் கைது
இவ்வாறு மீட்கப்பட்ட கஞ்சாவினை கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனம், சான்றுப்பொருட்கள் என்பனவற்றை பூநகரி பொலிஸாரிடம் மேலதிக நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளனர்.
இதே நேரம் குறித்த வாகனத்தை செலுத்தி சென்ற சாரதியும், உதவியாளரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
