கேரளா கஞ்சாவினை பதுக்கியவர் கைது
கேரளா கஞ்சாவினை சூட்சுமமான முறையில் பதுக்கி வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை - சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் வைத்தே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் பெறுமதி, 50 இலட்சத்திற்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினர்
கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடந்த புதன்கிழமை(5) இரு சந்தேக நபர்கள் பெருந்தொகையான கேரளா கஞ்சா மற்றும் ஒரு தொகை பணத்துடன் கல்முனை விசேட அதிரடிப்படையினர் இரு வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதன்படி 5 நாட்களாக தடுப்புகாவலில் வைக்கப்பட்ட மேற்படி இரு சந்தேக நபர்களிடம் விசேட அதிரடிப்படையினரின் மேலதிக விசாரணைகளின் பிரகாரம் குறித்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இத்தேடுதலில் 33 வயது மதிக்கத்தக்க ஒராபி பாஸா வீதியை சேர்ந்த சந்தேக நபரான வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்துடன் 18 கிலோ 169 கிராம் கேரளக் கஞ்சா வீட்டில் வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 18 மணி நேரம் முன்

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
