கெஹெலியவிற்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) உள்ளிட்ட 7 பேரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த தீர்ப்பானது, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (08.04.2024) வழங்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 2 அன்று தரமற்ற மனித நரம்பு வழி இம்யூனோகுளோபுலின் மருந்துகளை கொள்முதல் செய்ததன் தொடர்பான 10 மணிநேர விசாரணையின் பின்னர் கெஹெலிய கைது செய்யப்பட்டார்.
தொடரும் விளக்கமறியல்
அதேவேளை , கெஹெலிய கைது செய்யப்படுவதற்கு முன்னர் போதைப்பொருள் கொள்வனவு மோசடி தொடர்பில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே, கெஹெலிய மற்றும் குறித்த 07 நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
