ஐ.நா வாகனத்தில் சென்ற கெஹலிய : எழுந்துள்ள சர்ச்சை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார மற்றும் சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்ட வான் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த முறைப்பாடு தொடர்பில் இரகசிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிறைச்சாலைக்கு வான் வழங்கும் போது ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் விதித்த நிபந்தனைகளை மீறி சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் கோரிக்கைக்கு அமைய கெஹலியவை நீதிமன்றத்திற்கு அழைத்துவர இந்த வான் பயன்படுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கைதிகளை ஏற்றிச்செல்ல தடை
குழந்தைகளைத் தவிர கைதிகளை ஏற்றிச் செல்ல இந்த வான் பயன்படுத்தப்படக்கூடாது என்பதோடு, வாகனத்தை சிறை நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த கூடாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
சிறை ஆணையாளரும் இந்த நிபந்தனையை மீறியுள்ளதாகத் தெரிவித்து, இரகசிய பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
