யாழ். பல்கலைக்கழகத்தில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்
நாடு முழுவதிலும் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் அடையாள வேலைநிறுத்தமும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதனடிப்படையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று (19) முழுநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தையும் காலை 11 மணியளவில் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டத்தையும் முன்னெடுக்க உள்ளது.
குறித்த தகவலை யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் த.சிவரூபன் தெரிவித்துள்ளார்.
உடனடித் தீர்வு
அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்கக் கூட்டமைப்பின் 11.03.2024 மற்றும் 18.03.2024 திகதியிடப்பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதங்களின் பிரகாரம் முழுநாளும் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வேலைநிறுத்தமும் கவனயீர்ப்புப் போராட்டமும் நடைபெறவுள்ளது.

பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு உரிய கால அவகாசங்கள் வழங்கப்பட்டும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசும் இதுவரை தீர்வை வழங்காதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உடனடித் தீர்வை வேண்டியும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri