வெடுக்குநாறிமலை விவகாரம் : நாடாளுமன்றில் நன்றி தெரிவித்த சார்ள்ஸ் நிர்மலநாதன்
வவுனியா வெடுக்குநாறிமலையில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட எட்டுபேரும் விடுதலைசெய்யப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றத்தில் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு அனைவரினது கவனத்திற்கும் குறித்த விடயம் கொண்டுவரப்பட்டது.
முதலாம் இணைப்பு
வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற பொலிஸாரின் அராஜகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி நாடாளுமன்றத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் (19.03.2024) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது பொலிஸாரின் அராஜகத்தை நிறுத்தகோரியும் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டு பேரையும் விடுதலை செய்ய கோரியும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோஷமிட்டு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் போராட்டத்தில் கலந்துகொண்டு வெடுக்குநாறிமலை விவகாரத்திற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை நீதி அமைச்சர் அளித்ததையடுத்து போராட்டம் முற்றுப்பெற்றது.

பதினாறாவது மே பதினெட்டு 23 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
