இலங்கையில் மீண்டும் அரிசிக்கு தட்டுப்பாடு!
இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பெரும் போகத்தின் போது அரசாங்கம் நெல் கொள்வனவு செய்வதில் தோல்வி அடைந்துள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனால் தற்பொழுது சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுப்பாட்டு விலை
மேலும் சம்பா மற்றும் நாடு ஆகிய அரிசி வகைகள் கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் நுகர்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்க நேரிட்டுள்ளதாக தேசிய விவசாயிகள் ஒன்றியத்தின் தலைவர் அனுராதா தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
கடந்த பெரும் போகத்தின் போது அரசாங்கத்தின் உத்தரவாத விலையை மீறி தனியார் துறையினர் கூடுதல் விலைக்கு நெல் கொள்வனவு செய்திருந்தனர்.
நெல் கொள்வனவு
இவ்வாறே கூடுதல் விலைக்கு நெல் கொள்வனவு செய்ததன் காரணமாக குறைந்த விலைக்கு அரிசி விற்பனை செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் இந்த விவகாரம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தையில் அரிசி விற்பனை தொடர்பான மேலாண்மை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தவறி உள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்து விரைவில் அரசாங்கம் வர்த்தமானி ஒன்றை வெளியிடும் என அனுராத தென்னக்கோன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 3 நாட்கள் முன்

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri
