இலங்கை மக்களின் மனித நேயம் மரணிக்கவில்லை...! நெகிழ்ச்சியடைந்த மருத்துவர்
இலங்கை மக்களின் மனித நேயம் குறித்து பதுளை மருத்துவமனை மருத்துவர் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
எல்ல-வெல்லவாய வீதியில் பயங்கர விபத்து நடந்தபோது, பதுளை பொது மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட ஏராளமான மருத்துவமனை ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றிருந்தனர்.
அங்கு நடந்த சம்பவங்கள் குறித்து மருத்துவர் பாலித ராஜபக்ஷ தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
கோர விபத்து
கோர விபத்தின் போது நாங்கள் மிகவும் கடினமாக உழைத்தோம். நான் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒருவராகும். எனது இதயம் ஒரு பேஸ்மேக்கரால் இயக்கப்படுகிறது.
எனது உயிரும் பெரும் ஆபத்தில் இருந்தது. இந்த நேரத்தில், இராணுவத்தினர் கூட மிகுந்த முயற்சியுடன் அங்கு வந்தனர்.
மிகவும் கடினமான முயற்சியின் பின்னரே அங்கிருந்து வெளியே வந்தோம். மறுநாள் காலையில்தான் அங்கு ட்ரோன் படங்களைப் பார்த்தோம். நான் எப்படி இங்கிருந்து கீழே இறங்கினேன் என்றும் யோசித்தேன்.
என் காலில் இரண்டு செருப்புகள் கூட இல்லை. அங்கிருந்த இராணுவர வீரர் ஒருவர் தனது பூட்ஸைக் கழற்றி எனக்குக் கொடுத்தார்.
இந்த நேரத்தில் ஒரு கயிறு உடைந்தால், குறைந்தது நூறு பேர் ஆபத்தில் இருப்பார்கள். ஏனென்றால் ஒரு கயிற்றில் சுமார் நூறு பேர் தொங்கிக் கொண்டிருந்தனர். அந்த அர்ப்பணிப்பை வார்த்தைகளால் விபரிக்க முடியாது.
நாட்டில் மனிதநேயம்
ஒரு கட்டத்தில், கடுமையான தண்ணீர் தாகம் ஏற்பட்டது. நான் தண்ணீர் கேட்டேன். அந்த நேரத்தில், தண்ணீர் இல்லை.
பேருந்தில் இருந்தவர்கள் தண்ணீர் போத்தல் வாங்கி வந்திருப்பார்கள், அதில் சிக்கியிருக்கும் அதனை பார்த்து தருமாறு கேட்டேன். பார்த்த போது, 2 தண்ணீர் போத்தல்கள் கிடைத்தன. நாங்கள் அவற்றை குடித்தோம்.
அரை மணி நேரத்திற்குள், ஒரு இளைஞன் ஒரு பை நிறைய குளிர்ந்த நீரை எடுத்துக்கொண்டு மேலிருந்து கீழே வந்தார். இந்த நாட்டில் மனிதநேயம் இறக்கவில்லை. மனிதநேயம் இன்னமும் உள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் தீர்த்தத் திருவிழா




