இலங்கை மக்களுக்கு அரிய வாய்ப்பு: வானில் இன்று நிகழவுள்ள மாற்றம்
இலங்கை உட்பட பல நாடுகளுக்கும் தெரியும் முழு சந்திர கிரகணம் இன்று(07.09.2025) நிகழும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பிரிவு பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்றிரவு 8.58 மணி முதல் நாளை(08) அதிகாலை 2.25 மணி வரை, 5 மணி நேரம் 27 நிமிடங்கள் இந்த சந்திர கிரகணத்தைக் காண ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கும் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இன்றிரவு 11.01 மணி முதல் நாளை அதிகாலை 12.22 மணி வரை முழு சந்திர கிரகணத்தின் முழு தோற்றம் நிகழும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு சந்திர கிரகணம்
மேலும், இந்த சந்திர கிரகணம் உலக மக்களுக்கு சுமார் 85 சதவீதம் முழுமையான அல்லது பகுதி கிரகணமாகத் தெரியும்.
2028 வரை இலங்கையர்கள் இதுபோன்ற முழு சந்திர கிரகணத்தைக் காண வாய்ப்பு கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் தீர்த்தத் திருவிழா




