அநுர மீது யாரும் எதிர்பார்க்காத குற்றச்சாட்டு..! முன்னாள் எம்.பியால் வெடித்த சர்ச்சை
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இருக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மித்தெனிய தலாவ பகுதியில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட உறுப்பினர் ஏதேனும் தவறு செய்திருந்தால், அது அவரது தனிப்பட்ட தவறு என்றும், கட்சியுடன் அதற்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசியப் பட்டியல்
ஈஸ்டர் தாக்குதலை நடத்திய இரண்டு தற்கொலை குண்டுதாரிகளின் தந்தை அரசாங்கத்தின் தேசியப் பட்டியலைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் என்றும் இதனால் பிரதான சூத்திரதாரியாக அநுர இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எல்லா வெல்லவாய சாலை அமெரிக்க விமானங்களை தரையிறக்குவதற்காக கட்டப்படுவதாகக் கூறிய ஒரு கட்சியின் தலைவரின் குற்றச்சாட்டுகளைப் பற்றி தாம் கவலைப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சோரம் போன அரசியலை மீட்டெடுக்க விடுதலை புலிகளின் தலைவரின் பெயரை பயன்படுத்தும் சிங்கள அரசியல்வாதிகள்..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri