ஈஸ்டர் தாக்குதல் குறித்து சஜித்திடம் வாக்கு மூலம்!
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வாக்கு மூலம் பதிவு செய்ய உள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி சொலிசுட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இந்த விடயத்தை நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே உள்ளிட்டவர்கள் பிரதான சூத்திரதாரிகளை பாதுகாப்பதாக தாம் முதலில் கூறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு முன்னதாகவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் கூறியிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இந்த விவகாரம் தொடர்பில் அவர்களிடமும் வாக்கு மூலங்கள் பதியப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக முன்கூட்டியே அறிந்திருந்தும், இராணுவப் புலனாய்வுத் துறையினர் அனைத்துத் தகவல்களையும் சதித்திட்டமாக மறைத்து, தாக்குதல் நடப்பதற்கு அனுமதித்து அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
சுரேஷ் சலே, தேசிய வைத்தியசாலையை ஓய்வு விடுதியாக மாற்றிக் கொண்டு ஓய்வெடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த வழக்கு எதிர்வரும் 22ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.