ஊர்காவற்றுறை முச்சக்கரவண்டி சாரதிகளினால் அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை
யாழ். (Jaffna) ஊர்காவற்றுறை பிரதேச முச்சக்கரவண்டிகள் உரிமையாளர்களினால் எதிர்கொள்ளப்படும் அசௌகரியங்களுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் (Douglas Devananda) கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கையில், ஊர்காவற்றுறை பகுதியில் அதிகளவிலான முச்சக்கரவண்டிகள் இருந்தும் தமது
சேவைகளை கட்டமைப்பு ரீதியாக முன்னெடுப்பதில் உரிமையாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டு
வருகின்றனர்.
மேலும், முச்சக்கரவண்டிகள் தமது சேவையை மேற்கொள்ள ஒரு சங்க கட்டமைப்பு இல்லாத காரணங்களால் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
மாநகரசபை சாரதிகள்
இதன்காரணமாக, தமது பிரதேசத்திற்கு சங்க கட்டமைப்பு ஒன்றினை ஏற்படுத்தி தர வேண்டும்” என முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அது மாத்திரமன்றி, நீண்டகாலமாக யாழ். மாநகர சபையில் சாரதிகளாக பணியாற்றும் ஊழியர்கள், தமக்கான நிரந்தர நியமனங்களை பெற்றுத்தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
மேலும் அவர்கள், தற்போதைய சூழலில் வாழ்க்கை செலவுகள் அதிகரித்துள்ளமையினால் பெறும் வருமானம் அதற்கு ஈடுசெய்யும் வகையில் இல்லாதுள்ளது.
நிரந்தர பணி
இந்நிலையில், தமது பணியை நிரந்தரமாக்கி தருவதனூடாக வாழ்வாதாரத்தை நிரந்தரமாக மேம்படுத்திக்கொள்ள முடியும்.
ஆகையால், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு தாருங்கள் என கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இவற்றிற்கமைய, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட முச்சக்கரவண்டி சங்க நிர்வாகத்தினருடன் கலந்தாலோசித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தீவகத்தில் தற்போது சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளின் பட்டியல்களில் ஒன்றினை சமர்ப்பிக்குமாறும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
