நாடாளுமன்றில் பகிரங்க மன்னிப்பு கோரிய காவிந்த ஜயவர்தன!
நிகழ்நிலை சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களித்தமைக்காக பகிரங்க மன்னிப்பு கோருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த சட்ட மூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்ப்பித்த போது காவிந்த உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியினர் அதற்கு எதிராக வாக்களித்தனர்.
ஓர் ஆபத்தான சட்டம்
இந்த சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களித்தமைக்காக வருந்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்டம் ஓர் ஆபத்தான சட்டம் என காண்பிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
முகநூலில் இடப்பட்ட அவதூறு பதிவு ஒன்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சித்த போது இந்த சட்டத்தின் முக்கியத்துவத்தை தாம் புரிந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டம் ஜனநாயகத்தை ஒடுக்கும் எனவும், அரசியல் செயற்பாடுகளுக்கு இடையூறாக அமையும் எனவும், கருத்துக்களுக்காக சிறைக்கு செல்ல நேரிடும் எனவும் கூறப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முறைப்பாடு
முறைப்பாடு ஒன்ற செய்ய பொலிஸ் அதிகாரிகளின் உதவியை நாடிய போது இந்த சட்டத்தின் பயன்கள் குறித்து அவர்கள் விளக்கியதாக காவிந்த தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் அவதூறு பிரசாரங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடிய சட்ட ஏற்பாடுகள் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை குறித்து மன்னிப்பு கோருவதாகவும் கட்சி என்ற ரீதியில் எடுத்த தீர்மானத்திற்கு அமைய தாம் வாக்களித்ததாகவும் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.