காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான அறிவிப்பு
காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவயில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதிகரிக்கும் மழை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவயில் திணைக்களம், பொது மக்களை அறிவுறித்தியுள்ளது.
தற்கொலை செய்துகொள்ளப்போகும் மயில், அதிர்ச்சியில் மீனா.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ Cineulagam
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்தது... மாப்பிள்ளை யார் தெரியுமா? ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam