கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள பல மாற்றங்கள் - பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் வகையில் புதிய CCTV கமரா கட்டுப்பாட்டு நிலையத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்காக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று இடம்பெற்ற கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்ட அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
தொழில்நுட்ப மென்பொருள்

இந்த கமரா அமைப்பு மூலம் புதிய தொழில்நுட்ப மென்பொருளைப் பயன்படுத்தி தரவுகளை பகுப்பாய்வு செய்ய முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பயணிகள் வருகை முனையம் மற்றும் புறப்படும் முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிவரவு அதிகாரிகள் கவுன்ட்டர்களை ஆய்வு செய்தனர்.
குடியேற்ற சேவை

விமானப் பயணிகளுக்கு திறமையான மற்றும் பயனுள்ள சேவையை வழங்குவதற்கும், மற்ற சர்வதேச விமான நிலைய நிலைமைகளுக்கு ஏற்ப குடியேற்ற சேவைகளை வழங்குவதற்கும், தரைத் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும், புதிய e-gate கவுண்டர்கள் அமைப்பது குறித்து திரன் அலஸ் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan